ETV Bharat / international

அர்மீனிய பிரதமருக்கு கரோனா! - அர்மீனயியப் பிரதமர் நிக்கோல் பாஸின்யான் கரோனா

யெரவன்: அர்மீனிய பிரதமர் நிகோல் பாஷின்யன், அவரது குடும்பத்தினருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ARMENIAN PRESIDENT CORONA
ARMENIAN PRESIDENT CORONA
author img

By

Published : Jun 1, 2020, 6:28 PM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. இந்த நோய்க்காரணமாக இதுவரை 61 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நோய் மதம், இன, மொழி, நாடு, ஆண்டி, அரசன் எனப் பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் தாக்கிவருகிறது. அந்த வகையில், அர்மீனிய நாட்டின் பிரதமர் நிகோல் பாஷின்யன், அவரது குடும்பத்தினருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவிட்டுள்ள, "எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் கரோனா உறுதியாகி உள்ளது. ஆனால், நோய்க்கான எந்த அறிகுறியும் எனக்கு இல்லை. இந்த நோயிலிருந்து நான் விடுபடும்வரை தனிமையிலிருந்து தொடர்ந்து பணிபுரிவேன்.

கரோனாவிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள எப்போதும் முகக்கவசம் அணிந்திருங்கள், அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கை கழுவுங்கள்" எனக் கூறியுள்ளார்.

ஐரோப்பிய நாடான அர்மீனியாவில் இதுவரை ஒன்பதாயிரத்து 492 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. மூன்று ஆயிரத்து 402 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 149 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டில், கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 460 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. எனினும், நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படுத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், மக்கள் அனைவரும் தகுந்த இடைவெளி, சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அர்மீனிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : உச்சமடையும் போராட்டம்... பதுங்கு குழிக்குள் ட்ரம்ப்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.