ETV Bharat / international

சிகிச்சையில் உள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்த ஜெர்மனி அதிபர் - ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்

உடல்நலக் குறைவு காரணமாக ஜெர்மனியில் சிகிச்சை பெற்றுவரும் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அவெக்சி நவல்னியை ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் சந்தித்துள்ளார்.

Berlin hosp
Berlin hosp
author img

By

Published : Sep 28, 2020, 4:55 PM IST

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி விமானத்தில் பயணம் செய்தபோது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சைபீரியாவிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்றபோது அவர் மயக்கமடைந்த நிலையில், ரஷ்யாவில் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உயர் சிகிச்சைக்காக அவர் ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டார். நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகக் கூறிய ஜெர்மன் மருத்துவமனை, அவருக்கு தொடர்ச்சியாக தீவிர சிகிச்சை அளித்துவந்தது. 32 நாட்கள் சிகிச்சைக்குப் பின் நவல்னி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டு சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில், நவல்னியை ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். இது குறித்து நவல்னி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த சந்திப்பு ஒன்றும் ரகசியமானது இல்லை. தனிப்பட்ட முறையிலான இச்சந்திப்பின் போது ஏஞ்சலா மெர்க்கல் எனது குடும்பத்தினரிடம் கலந்துரையாடினார். என்னைச் சந்தித்த ஏஞ்சலாவுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் தீவிர எதிர்ப்பாளரான நவல்னி, அந்நாட்டு அரசு நிர்வாகங்களில் உள்ள ஊழல் தொடர்பாக தொடர் விமர்சனங்களை முன்வைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பத்தாண்டுகளாக வருமான வரி செலுத்தாத ட்ரம்ப்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.