கரோனா பரவல் காரணமாக இங்கிலாந்தில் போடப்பட்டுள்ள ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பது குறித்து இன்று (பிப். 21) அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
முன்னதாக இங்கிலாந்தில் போடப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகள் விவரங்கள் குறித்து தெரிவித்துள்ள போரிஸ் ஜான்சன், “2020 டிசம்பரில் இங்கிலாந்தின் கரோனா தடுப்பூசி வழங்குவது தொடங்கியதில் இருந்து 17 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, தற்போது இந்த திட்டம் மேலும் விரைவாக செல்லும். இதன் மூலம் இங்கிலாந்தில் வரும் ஜூலை மாத இறுதிக்குள் அனைத்து பெரியவர்களும் கரோனா தடுப்பூசிகளை பெறுவர்” எனத் தெரிவித்தார்.
மேலும், “இங்கிலாந்தில் குறைந்தது 17.2 மில்லியன் மக்கள் நாடு முழுவதும் உள்ள 1,500 தடுப்பூசி தளங்களில் முதல் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட ஆறு லட்சம் பேர் தங்கள் இரண்டாவது அளவைப் பெற்றுள்ளனர்” என்றுள்ளார்.
இதையும் படிங்க...அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நாடுகளில் ஊரடங்கு நீட்டிப்பு!