கீவ்: உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்.24ஆம் தேதி முதல் ரஷ்யப்போர் தொடங்கியுள்ளது. மேலும், பத்து நாள்களுக்கும் மேலாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வந்தது. இதனிடையே மனிதாபிமான அடிப்படையில் கார்கீவ், சுமி உள்ளிட்ட நான்கு நகரங்களிலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் நோக்குடன் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்தது.
தற்போது, இந்த மனிதாபிமான பாதையின் வழியாகப் பல்வேறு மக்கள் பெலாரஸ், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு சென்றுகொண்டிருக்கும் நிலையில், இந்த பாதையை பயன்படுத்தி இந்தியர்கள் உடனே வெளியேற வேண்டும் என உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
-
ADVISORY TO INDIAN NATIONALS IN UKRAINE. @MEAIndia @DDNewslive @DDNational @PIB_India @PIBHindi @IndianDiplomacy pic.twitter.com/rFvAock4Wg
— India in Ukraine (@IndiainUkraine) March 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ADVISORY TO INDIAN NATIONALS IN UKRAINE. @MEAIndia @DDNewslive @DDNational @PIB_India @PIBHindi @IndianDiplomacy pic.twitter.com/rFvAock4Wg
— India in Ukraine (@IndiainUkraine) March 8, 2022ADVISORY TO INDIAN NATIONALS IN UKRAINE. @MEAIndia @DDNewslive @DDNational @PIB_India @PIBHindi @IndianDiplomacy pic.twitter.com/rFvAock4Wg
— India in Ukraine (@IndiainUkraine) March 8, 2022
தூதரகம் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"தற்போது உள்ள உக்ரைனில் சிக்கியுள்ள மக்கள் உடனடியாக வெளியேற, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று (மார்ச் 8) காலை 10 மணியளவில் மனிதாபிமான பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. அந்த பாதையைப் பயன்படுத்தி உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் அந்நாட்டை விட்டு உடனடியாக வெளியேறவும்.
மேலும், இந்தியர்கள் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி ரயில், வாகனங்கள் உள்ளிட்ட எந்தவிதமான போக்குவரத்தையாவது பயன்படுத்தி வெளியேறவும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, ரஷ்யா, உக்ரைன் ஆகிய இருநாட்டு அதிபர்களிடமும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 7) தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது, இந்தியர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும்படி இருவரிடமும் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஷ்யாவின் ராணுவ அலுவலர் கொல்லப்பட்டார் - உக்ரைன் தகவல்!