பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் 90 வயது மூதாட்டி மார்கரெட் பெயின். அரசாங்கம் வழங்கும் ஓய்வூதியத்தில்தான் இவர் தன் கடைசிக் காலத்தைக் கழித்துவருகிறார். இந்நிலையில், கரோனா பெருந்தொற்றால் பிரிட்டன் நாடே திண்டாடி வரும் சூழலில், அந்நாட்டு சுகாதாரத் துறைக்கு நிதி திரட்ட முடிவெடுத்து இவர், தள்ளாத வயதிலும் தன் வீட்டிலுள்ள படிக்கட்டுகளில் 282 முறை ஏறும் சவாலில் உற்சாகத்துடன் களமிறங்கியுள்ளார்.
இதுவரை அவருக்கு 3.7 கோடி ரூபாய் வரை நிதி கிடைத்துள்ளது. 12 வாரங்களுக்குள் இந்தச் சவாலை தான் செய்து முடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். இவரின் இந்த முயற்சியைப் பாராட்டி பிரிட்டன் இளவரசர் சார்ஸ் இவருக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஈரானில் மன்னர் ஆட்சிக்கு வழிவகுத்த அமெரிக்கா - ரகசிய ஆவணங்கள் செல்லும் உண்மை!