ரஷ்யாவின் கசான் பகுதியில் உள்ள பள்ளி எண் 175க்குள் இன்று (மே.11) காலை நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் பள்ளி மாணவர்கள் ஒன்பது பேர் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட 17 வயது இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தப்பி ஓடிய மற்றொரு நபரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஏதேனும் பயங்கரவாத உள்நோக்கம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.