ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத ஆதரவு மற்றும் தடைகள் கண்காணிப்புக் குழுவின் 26ஆவது அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தான் நாட்டின் நிம்ருஸ், ஹெல்மண்ட் மற்றும் கந்தகார் மாகாணங்களில், ஐ.எஸ்.ஐ.எஸ், அல்-கொய்தா மற்றும் அதனுடன் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், இந்திய துணைக் கண்டத்தில் அல்-கொய்தா (AQIS) என்ற பெயரில் தலிபான் அமைப்பின் கீழ் செயல்படுவதாக கூறியுள்ளது.
இந்தக் குழுவில் வங்கதேசம், இந்தியா, மியான்மர் மற்றும் பாகிஸ்தானில் இருந்து 150 முதல் 200 உறுப்பினர்கள் உள்ளதாகவும், மறைந்த அசிம் உமருக்குப் பின் வந்த ஒசாமா மஹ்மூத் இந்த (AQIS) அமைப்பிற்கு இன் தற்போது தலைவராக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் முன்னாள் தலைவரின் மரணத்திற்குப் பழிவாங்க பிராந்தியத்தில் பதிலடி நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளதாக ஐ.நா சந்தேகிக்கிறது.
ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள ஒரு பெரிய பயங்கரவாதக் குழுவான தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) பாகிஸ்தானில் பல்வேறு உயர்மட்ட தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ளதுடன், ஜமாஅத்-உல்-அஹ்ரர் மற்றும் லஹ்ஷ்கர்-இ-இஸ்லாம் ஆகியோரால் மற்றவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துவருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
ஆப்கானிஸ்தானில் உள்ள மொத்த பாகிஸ்தான் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஆறாயிரம் முதல் ஆறாயிரத்து 500 வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தானில் 40 ஆயிரம் பயங்கரவாதிகள் இருப்பதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டார், அங்கிருந்து அவர்கள் அண்டை நாடுகளைத் தாக்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.
உறுப்பு நாடுகளின் தகவலின்படி, 12 ஆப்கானிஸ்தான் மாகாணங்களில் அல்-கொய்தா இரகசியமாக செயல்பட்டு வருவதாகவும், அதன் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி நாட்டில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத கண்காணிப்புக் குழு ஆப்கானிஸ்தானில் மொத்தமாக அல்-கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 400 முதல் 600 வரை இருப்பதாகவும், ஐ.எஸ்.ஐ.எல்-கே உறுப்பினர் எண்ணிக்கை இரண்டாயிரத்து 200 எனவும் மதிப்பிடுகிறது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், ஆப்கானிஸ்தான் சிறப்புப் படைகள் தொடர்ச்சியான நாடு தழுவிய நடவடிக்கைகளை மேற்கொண்டதில், பல குழுவின் தலைவர்களை கைது செய்ய வழிவகுத்தது,
காபூல் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஐ.எஸ்.ஐ.எல்-கே மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தக்கூடும் எனவும், இது அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை எதிர்க்கும் தலிபான் அமைப்பினரை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது.