உலகை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் ஸ்பெயின் நாட்டிலும் தனது ரூத்ர தாண்டவத்தை ஆரம்பித்துள்ளது. அங்கு தினந்தோறும் கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று ஓரே நாளில் கரோனா வைரஸ் பாதித்த 514 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனால், ஸ்பெயினில் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 696 நபர்களாக உயர்ந்துள்ளது. தற்போது வரை, சுமார் 40 ஆயரத்திக்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் காரணமாக பாதிப்படைந்துள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஸ்பெயினில் மாட்ரிட் மாகாணத்தில் 12 ஆயிரம் பேர் பாதிப்படைந்துள்ள நிலையில், 1500 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவிட் 19: தனிமைப்படுத்துதலின் முக்கியத்துவமும் அவசியமும்!