டேவிட் ஸ்வார்ஜான்ஸும் அவருடன் அமெரிக்கப் பயணிகளும் ஐஸ்லாந்தின் கடற்கரை பகுதியை ஹெலிகாப்டர் மூலம் சுற்றிப் பார்த்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில், சுமார் 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கடற்கரையில் இறந்துக் கரை ஒதுங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பைலட் திமிங்கலங்கள் என்று பெயரிடப்பட்டிருந்தாலும் இது டால்பின் மீன் வகையைச் சார்ந்தது. மற்ற டால்பின் இனங்களைப் போல இவையும் தங்கள் கூட்டத்துடன் பெரும் பிணைப்பில் இருக்கும். ஆகவே ஒரு பைலட் திமிங்கலத்தைப் பின்பற்றி மற்றவையும் வந்திருக்கக்கூடும் என்று யூகிக்கப்படுகிறது. மேலும் டீஹைட்டிரேசன் எனப்படும் நீர்ப்போக்கினாலும் இறந்திருக்கக் கூடும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.