ரஷ்யாவில் இர்குட்ஸ்க் என்ற பகுதியில் ஏற்பட்ட தொடர்மழையின் காரணமாக அதன் அருகில் உள்ள பைக்கல் எரியும் அங்காரா என்ற ஆறும் அதிகப்படியான நீரால் முற்றிலும் நிரம்பின. இதனால், கறைகள் உடைத்து குடியிறுப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்து கட்டடங்களை நிலைகுலையச் செய்தது.
இதில், ஐந்துபேர் நீரில் மூழ்கி பலியாகினர். மேலும், 350க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக என ரஷ்யாவின் அவரசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஹெலிகாப்டர்களையும், படகுகளையும் அனுப்பியுள்ளது ரஷ்யா அரசு.
இதைனை தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஜி20 மாநாட்டில் இருப்பதால், ரஷ்யாவிற்கு சென்ற பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதாக அறிவித்துள்ளார்.