ETV Bharat / international

ரஷ்ய படை தாக்குதலால் 40 பேர் உயிரிழப்பு - உக்ரைனில் குண்டு மழை

ரஷ்ய படை தாக்குதலால் உக்ரைனில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

40-killed-in-ukraine-russia-war
40-killed-in-ukraine-russia-war
author img

By

Published : Feb 24, 2022, 5:10 PM IST

கீவ்: ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையே இன்று(பிப்.24) போர் வெடித்துள்ளது. ரஷ்ய ராணுவப்படையால் உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதிகளில் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருகின்றன. உக்ரைன் ராணுவமும் பதிலடிகொடுத்து, லுஹான்ஸ்க் பகுதியில் 5 ரஷ்ய விமானங்கள், 1 ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது.

இதனிடையே உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் ஒலெக்ஸி அரெஸ்டோவி ரஷ்ய படை தாக்குதல் காரணமாக உக்ரைனில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து ஒலெக்ஸி "உக்ரேனிய மக்களின் எதிர்காலம் ஒவ்வொரு உக்ரேனியரையும் சார்ந்துள்ளது" நாட்டைப் பாதுகாக்க மக்கள் அனைவரும் ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ரஷ்ய படையால் இதுவரை உக்ரைனில் 40 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரஷ்யாவின் 5 விமானங்கள், 1 ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது; உக்ரைன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.