ETV Bharat / international

ரஷ்யாவின் கரோனா தடுப்பூசி மருந்து: 3ஆம் கட்ட பரிசோதனை எப்போது?

மாஸ்கோ: ரஷ்யா கண்டுபிடித்த கரோனாவுக்கான மருந்தின் மூன்றாம் கட்ட ஆய்வக பரிசோதனை அடுத்த 7 முதல் 10 நாள்களுக்குள் தொடங்கப்படும் என அந்நாடு அறிவித்துள்ளது.

ரஷ்யா
ரஷ்யா
author img

By

Published : Aug 16, 2020, 11:02 PM IST

சீனாவிலிருந்து பரவிய கரோனா தொற்று தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த பெருந்தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணிகளில் பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் ஈடுபட்டுவரும் நிலையில், ஸ்புட்னிக் வி (SPUTNIK V) என்ற கரோனா தடுப்பு மருந்தை ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக, அந்நாட்டின் அதிபர் புதின் கடந்த வாரம் அறிவித்தார்.

மூன்றாம் கட்ட ஆய்வக பரிசோதனை முழுமையாக முடிவடையாத காரணத்தால் ஸ்புட்னிக் வி நம்பகத்தன்மை குறித்து உலக விஞ்ஞானிகள் பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், அதன் மூன்றாம் கட்ட ஆய்வக பரிசோதனை அடுத்த 7 முதல் 10 நாள்களில் தொடங்கப்படும் என செய்தி வெளியாகியுள்ளது.

இந்த பரிசோதனையில், ஆயிரக்கணக்கானோர் ஈடுபடவுள்ளதாக ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த பரிசோதனை மாஸ்கோவில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ நடைமுறைகளை ரஷ்யா முறையாகப் பின்பற்றவில்லை என்பதைக் கண்டித்து, ரஷ்ய மருத்துவ கவுன்சிலில் உறுப்பினராக இருந்த பேராசிரியர் அலெக்ஸான்டர் சுச்சாலின் தனது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நயாகரா நீர்வீழ்ச்சியில் மிளிர்ந்த இந்திய மூவர்ணக் கொடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.