பேய் படங்களில் கொத்துக்கொத்தாகப் பறவைகள் உயிர்விடுவது போன்ற காட்சிகள் சித்திரிக்கப்படும். அதேபோல், வேல்ஸ் நாட்டில் வானத்திலிருந்து கொத்துக்கொத்தாகப் பறவைகள் சாலையில் விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
வேல்ஸ் நாட்டின் வெல்ஷ் நகரின் வழியாக மருத்துவரை சந்திக்க காரில் ஹன்னா (Hannah) என்ற பெண் பயணித்துள்ளார். அப்போது, தனது காருக்கு மேல் நூற்றுக்கணக்கான பறவைகள் அழகாகப் பறந்து கொண்டிருந்ததை தனது காதலனுக்கு செல்போனில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மருத்துவரை சந்தித்துவிட்டு திரும்பிவரும் வேளையில், சாலையில் பறவைகள் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து காரிலிருந்து உடனடியாக இறங்கிய ஹன்னா, பறவைகள் எப்படி இறந்தன என்பதை கண்டுபிடிக்க முயன்றார். மேலும், இதை தனது செல்போனில் அப்பெண் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது தற்போது வைரலாகியுள்ளது. மேலும், இது தொடர்பாக நார்த் வேல்ஸ் காவல் துறைக்கும் உடனடியாகத் தகவல் அளிக்கப்பட்டது. இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையும் விலங்குகள் ஆராய்ச்சி மையமும் பறவைகளின் உடலை உடற்கூறாய்வு செய்வதற்கு எடுத்துச்சென்றனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இந்த நூற்றுக்கணக்கான பறவைகளின் உயிரிழப்பு மிகவும் சந்தேகத்திற்கிடமாகவே உள்ளது. சில தரப்பினர் நஞ்சு கலந்த உணவினை பறவைகள் உண்டதால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: காது கேட்காத குழந்தை தாயின் குரலை முதன்முதலாகக் கேட்கும் க்யூட் காணொலி!