வட கொரியா, சீனா நாடுகளுக்கிடையே சமீபகாலமாக நல்லுறவு இருந்துவருகிறது. அதன் விளைவாக, வட கொரியா தலைநகர் பியொங்யாங்கிற்கு முதல் முறையாக சீன அதிபர் ஷி ஜின்பிங் அரசு முறை பயணமாக வந்தடைந்தார்.
கடந்த 14 ஆண்டுகளில், முதல் முறை சீன அதிபர் ஒருவர் வட கொரியாவிற்கு வந்தடைந்துள்ளது இதுவே முதல் முறையாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க ஷி ஜின்பிங்-இன் இந்தப் பயணம், அமெரிக்கா-வடகொரியா இடையிலான உறவை வலுப்படுத்த உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாத இறுதியில், நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் ஷி ஜின்பிங் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்துப் பேச உள்ளார். அப்பொமுது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத சோதனையை வட கொரியா முற்றிலுமாக கைவிடுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வட கொரியா-சீனா இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.