கரோனா வைரஸின் மையப்புள்ளியான வூஹான் மாகாணத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் அம்மாகாணத்தில் இன்று சில பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள சீனாவின் மத்திய தொலைக்காட்சி, மாகாணத்தில் 121 உயர் மற்றும் தொழிற்கல்வி பள்ளிகளில் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்கு திரும்பியதாகத் தெரிவித்துள்ளது.
வூஹான் நகராட்சி அரசாங்கத்தின் கூற்றுப்படி, 83 மூத்த நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 38 மேல்நிலை தொழிற்கல்வி பள்ளிகளில் முதல் பகுதி பட்டதாரிகளுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன எனத் தெரியவருகிறது.
இந்தப் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு முழுவதுமாக சுத்தம் மற்றும் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பள்ளிகளில் கிரேடு 3 வகுப்புகளின் அனைத்து ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும், அவர்கள் திரும்புவதற்கு முன்னர் மாணவர்களுக்கும் சுகாதார பரிசோதனைகள் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கரோனா வைரஸ் பெரும்பாலான மக்களுக்கு லேசான அல்லது மிதமான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
சிலருக்கு,குறிப்பாக வயதானவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, இது மிகவும் கடுமையான பாதிப்பையோ அல்லது மரணத்தையோ கூட ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: '9 கோடி மக்கள் ஆரோக்கிய சேது செயலியைத் தரவிறக்கம் செய்துள்ளனர்' - மத்திய அரசு