சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு (2019) டிசம்பர் மாதம் தோன்றிய கோவிட்-19 வைரஸ் தொற்று நோய் தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது.
இந்த நோய் காரணமாக உலகளவில் இதுவரை 28 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சூழலில், கோவிட்-19 நோயின் பிறப்பிடமான வூஹான் நகரில் அந்நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகச் சீன தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் மி ஃபெங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மி ஃபெங் கூறுகையில், "வூஹான் சுகாதாரத்துறை பணியாளர்களின் கடும் உழைப்பு காரணமாக இந்த வெற்றியை அடைந்துள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க : லைசால்... பிளீச்சிங் பவுடர்...ட்ரம்ப் பேச்சைக் கேட்டு விபரீத முடிவெடுத்த நியூயார்க் வாசிகள்