ETV Bharat / international

வூஹான் நகரின் இறுதி கரோனா நோயாளியும் டிஸ்சார்ஜ்!

பெய்ஜிங்: கோவிட்-19 முதலில் கண்டறியப்பட்ட வூஹான் நகரில் சிகிச்சை பெற்றுவந்த மூன்று நோயாளிகள் முற்றிலும் குணமடைந்து, தற்போது வீடு திரும்பியுள்ளனர்.

Wuhan city discharges last three COVID-19

author img

By

Published : Jun 5, 2020, 10:49 PM IST

கோவிட்-19 தொற்று சீனாவின் வூஹான் நகரில், கடந்தாண்டு இறுதியில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து, சீனா எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக அந்நாட்டில் கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. இதனால் அங்கு மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பிவருகிறது.

இந்நிலையில், சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வியாழக்கிழமை (ஜூன்.5) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த 24 மணி நேரத்தில் ஷாங்காய் மாகாணத்தில் நான்கு பேர், சிச்சுவான் மாகாணத்தில் ஒருவர் என, மொத்தம் ஐந்து பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர நாடு முழுவதும் அறிகுறிகள் தென்படாத மூன்று பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது 297 "asymptomatic"(அறிகுறிகள் தென்படாத) நோயாளிகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சீனாவில் இதுவரை கோவிட்-19 உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 83,027ஆக உயர்ந்துள்ளது.

அவர்களில் 66 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் 6,634 பேர் உரிழந்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கோவிட்-19 முதலில் கண்டறியப்பட்ட வூஹான் நகரில் சிகிச்சை பெற்றுவந்த மூன்று நோயாளிகள் முற்றிலும் குணமடைந்து, தற்போது வீடு திரும்பியுள்ளதாக சீனாவின் அரசு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும், வூஹான் நகரில் கரோனா அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ள 245 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் இருப்பை கண்டறிய வூஹான் நகரிலுள்ள 1.2 கோடி மக்களுக்கும் கோவிட்-19 பரிசோதனை சீன அரசு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் ஐந்தாம் இடத்தை பிடித்த பிரான்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.