வாரத்தின் முதல் நாள் வர்த்தகமான இன்று உலக பங்குகள் சரிவுடன் தொடங்கின. அந்த வகையில் லண்டன், பாரிஸ் மற்றும் டோக்கியோவில் பங்குகள் சரிந்தன.
ஆனால் ஆஸ்திரேலியாவில் பங்குகள் 7 சதவிகிதம் உயர்ந்தன. ஆசிய பங்குகளை பொறுத்தமட்டில் சரிவுடன் தொடங்கியது.
தைவான் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பங்குகள் சரிந்தன. இந்தியாவின் சென்செக்ஸ் 4.2 சதவீதம் சரிந்து 28,524.43 புள்ளிகளாக உள்ளது.
கரோனா வைரஸ் பரவல் விரிவடைவதால் நிதி நிவாரணத்தை வழங்குவதற்கான உந்துதல் உலகளவில் அவசரத்தை அடைந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை தற்போது சீனா மற்றும் இத்தாலியை விட அதிகரித்துள்ளது.
பங்குகள் தொடர் சரிவை சந்தித்து வருவதால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.
இதையும் படிங்க : 'வங்கிகள் தொடர்ந்து இயங்கும்' - அமைச்சர் நிர்மலா சீதாராமன்