உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்படுகிறது. இந்தியாவில் நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரப்படுத்தியுள்ள மத்திய அரசு, தற்போது அண்டை நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
கொரோனா வைரஸை சார்க் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும். இதற்காக காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்ள தயார் என பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் அழைப்பு விடுத்தார். சார்க் அமைப்பில் உள்ள ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, நேபாள், இலங்கை, பாகிஸ்தான் என அனைத்து நாடுகளும் மோடியின் அழைப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளன.
பாலக்கோட் தாக்குதல், காஷ்மீர் சிறப்புச் சட்டம் நீக்கத்துக்குப்பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே உறவு மோசமடைந்த நிலையில், தற்போது மோடியின் அழைப்புக்கு பாகிஸ்தானும் வரவேற்பை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் இதில் பங்கேற்கும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் ஆயிஷா பரூகி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார். பாகிஸ்தான் சுகாதாரத்துறையின் சிறப்பு அலுவலர் சபர் மிஸ்ரா இதில் பங்கேற்பார் என பாகிஸ்தான் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனிமை நிறைந்த உலகம் இருக்கு கொரோனா பற்றி கவலை எதற்கு...