உலக சுகாதார உச்சி மாநாட்டின் இரண்டாவது நாளில் உரையாற்றிய உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், சுகாதாரப் பாதுகாப்பில் டிஜிட்டல் புகுத்தலினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவரித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், "டிஜிட்டல் யுகத்தின் முதல் தொற்றுநோயை தற்போது சந்தித்துவருகிறோம். நம்முடைய கருவிகள் பாதிப்பை எவ்வாறு கையாளுகிறது என்பதை ஆராய்ந்துவருகிறோம்.
டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உலகைப் பாதுகாப்பான வழியில் கொண்டுசெல்லக்கூடும். மக்களின் தனியுரிமை, ரகசியம் பாதுகாக்கப்படும். டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மூன்று நாள்கள் நடைபெறும் இந்த டிஜிட்டல் மாநாட்டில் சுமார் 300 வல்லுநர்கள் தொற்று நோயை டிஜிட்டல் உதவியுடன் கையாளுவது குறித்த கருத்துகளைப் பகிர்ந்தனர்.