கொழும்பு: இலங்கையில் புதிய நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடந்துவருகிறது.
225 தொகுதிகள் கொண்ட இந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முழு அதிகாரத்தையும் கைப்பற்றி ஆட்சியமைக்கும் முனைப்பில் ராஜபக்ச குடும்பம் உள்ளது.
கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தத் தேர்தலில் ராஜபக்ச குடும்பத்தினர் நான்கு பேர் முக்கிய பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் ஒரு கோடியே ஆறுபது லட்சம் பேர் வாக்களிக்கின்றனர்.
இலங்கையில் கரோனா வைரஸிற்கு 11 பேர் உயிர் இழந்துள்ளனர். இரண்டாயிரத்து 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'இந்தியாவில் கரோனா பரிசோதனை குறைவு'- சௌமியா சுவாமிநாதன் தகவல்