இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ளது சம்பாவத் மாவட்டத்தின் தனஞ்பூர். இந்தப் பகுதியின் பில்லர் எண் 811 நிலம் யாருக்குச் சொந்தம் என்பதில் இருநாடுகளுக்கு இடையே பிரச்னை நிலவிவருவதால், இந்தப் பகுதி அடைக்கப்பட்டு யாரும் நுழையக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தப் பில்லர் எண் 811 பகுதிக்குள் நேற்று மதிய நேரத்தில் நேபாளத்தைச் சேர்ந்த சிலர் குடிபோதையில் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பிலிருந்த காவல் துறையினர் அவர்களைத் தடுத்துநிறுத்தினர்.
மூன்று நாள்களுக்கு முன்னதாக நேபாள எல்லையில் இந்தியர் ஒருவர் மீது நேபாளக் காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியது பதற்றத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து இந்திய-நேபாள எல்லையில் பதற்றம் நிலவிவரும் சூழலில், சாஸ்த்ரா சீமா பால், ஆயுதப்படைக் காவல் துறையினர் பிரிவு காவலர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவைச் தொடர்ந்து பூட்டானை சீண்டும் சீனா