ETV Bharat / international

பாகிஸ்தானுக்கு வழங்கிவரும் நிதியுதவியை குறைத்த அமெரிக்கா! - US cuts 440 million financial aid to Pak

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு வழங்கிவரும் நிதி உதவியில் சுமார் 3 ஆயிரம் கோடியை குறைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

imran
author img

By

Published : Aug 17, 2019, 2:17 PM IST

பாகிஸ்தானில் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவும் வகையில் 'பாகிஸ்தான் என்ஹான்ஸ்ட் பார்ட்னர்ஷிப் அக்ரிமென்ட்' என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், 2010ஆம் ஆண்டு முதல் அந்நாட்டுக்கு அமெரிக்க நிதி உதவி அளித்துவருகிறது.

இதனிடையே, பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதாகக் கூறி பாகிஸ்தானுக்கு அளித்துவரும் நிதியுதவியை அமெரிக்கா படிப்படியாக குறைத்துவருகிறது.

2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுவந்த சுமார் இரண்டாயிரத்து 134 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ நிதியை ரத்து செய்து அமெரிக்க ராணுவம் உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, ஹக்கானி பயங்கரவாத அமைப்பு மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததைக் காரணம்காட்டி அந்நாட்டுக்கு வழங்கப்பட்டுவந்த சுமார் 7 ஆயிரம் கோடி நிதியை பென்டகன் (அமெரிக்க ராணுவ தலைமையகம்) கடந்த ஜனவரி மாதம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் நிதியுதவியில் மேலும் சுமார் மூன்றாயிரம் கோடியை ரத்து செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால், பாகிஸ்தானுக்கு அமெரிக்க அளித்துவரும் நிதியுதவியானது சுமார் இரண்டு லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

ஏற்கனவே கடன் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானுக்கு இது கூடுதல் பாதகத்தை விளைவிக்கக்கூடும்.

Intro:Body:

US cuts the Aid to Pakistan

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.