அமெரிக்க அதிகாரிகளுடன் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக தலிபான் அமைப்பினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தொடர் தாக்குதலுக்கு "ஆண்டு வசந்த தாக்குதல்" என்று தலிபான் அமைப்பு பெயரிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழல், வெளிநாட்டு ராணுவம் ஆகியவற்றை வெளியேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "தலிபானின் இந்த அறிவிப்பு ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அவர்கள் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று நினைக்கின்றனர்" என குறிப்பிடபட்டுள்ளது.