ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் ஆப்கானிஸ்தானின் ஏழ்மை நிலவரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் அறிக்கைபடி, 2021ஆம் ஆண்டில் மட்டும் ஆப்கனில் சுமார் ஏழு லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
வாரம்தோறும், இதுபோன்று பாதிப்புக்குள்ளாகும் சுமார் 60 ஆயிரம் பேருக்கு ஐநா சபை உதவி செய்கிறது. அந்நாட்டின் 35 லட்சம் குடிமக்கள் சர்வதேச உதவியை எதிர்பார்த்துள்ளனர்.
மொத்த மக்கள்தொகையின் 55 விழுக்காடு மக்கள்(2.3 கோடி) அதீத பசியால் வாடி வருகின்றனர். சுமார் 90 லட்சம் மக்கள் வறட்சியில் சிக்கித் தவித்துவருகின்றனர்.
அங்கு ஜனநாயக அரசு கவிழ்ந்து தலிபான் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அங்கு ஆட்சியாளர்களின் அடக்குமுறை செயல்பாடுகள் அதிகம் காணப்படுகிறது. அந்நாட்டின் வளங்கள் பயனற்று முடங்கியுள்ளதால், பொருளாதார வீழ்ச்சியை ஆப்கன் சந்தித்துள்ளது.
மேலும், ஐநா போன்ற சர்வதேச அமைப்புகளுடன் உரிய உறவை புதிய தலிபான் அரசு மேற்கொள்வதில்லை. இதன் காரணமாக ஆங்கு வாடும் மக்களுக்கு ஐநாவால் உரிய உதவிகளை நேரடியாக மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: Omicron India cases: குஜராத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு