ETV Bharat / international

வடகிழக்கு சிரியாவில் தொடர் வன்முறைகள்! - ஐநா கவலை

author img

By

Published : Nov 8, 2019, 1:52 PM IST

வடகிழக்கு சிரியாவில் நிகழும் தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்களினால் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.

un statement on syria war

அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, குர்து படையினருக்கும் துருக்கி ஆதரவு படையினருக்கும் இடையே சண்டை வலுத்தது. இந்தத் தாக்குதலில் இதுவரை 305 போர் வீரர்கள், 353 துருக்கி ஆதரவாளர்கள், சிரியா படையைச் சேர்ந்த 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் போரை நிறுத்தும்வகையில், ரஷ்ய தலைமைகளின் கீழ் அக்டோபர் 9ஆம் தேதி முதல் ஒரு சில ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இது சில பகுதிகளில் சண்டை நிறுத்தப்படுவதற்கு உதவியது. எனினும் சிரிய - துருக்கி எல்லையில் குர்து வசம் உள்ள பகுதிகளுக்குள் சிரிய துருப்புகள் நுழைவதற்கும் வழிவகுத்தது.

சிரியாவில் மீண்டும் அமெரிக்கப் படைகள்!

இதனைத் தொடர்ந்து கடந்த 48 மணிநேரத்தில் சிரியாவின் வடக்குப் பகுதியான ரக்கா மாகாணத்தில் (Raqqa province) அய்ன் இஷா (Ayn Issa) பகுதியில் குர்து படையினருக்கும் துருக்கி ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கண்காணிப்பாளர் ஒருவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகிழக்கு சிரியாவில் நிகழும் தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களின் பாதுகாப்பும், அன்றாட வாழ்வாதாரம் குறித்து பெரும் கவலையாகவே உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.