ETV Bharat / international

நகோர்னோ-காராபக் மோதலில் ஐநா தலையீடு - சர்வதேச போர் செய்திகள்

சர்ச்சைக்குரிய நகோர்னோ-காராபக் பகுதியில் அர்மேனியா-அசர்பைஜான் மோதலைக் கைவிட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

United Nations
United Nations
author img

By

Published : Oct 29, 2020, 2:38 PM IST

அர்மேனியா-அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியிலிருந்து போர் நடைபெற்று வருகிறது. சர்ச்சைக்குரிய பிராந்தியமான நகோர்னோ-காராபக் பகுதியில் இரு நாடுகளும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றன. இந்த மோதலை சீர்செய்ய அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், இவ்விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை தற்போது தலையிட்டுள்ளது. ஐநா சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெசின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃப்பேன் துராஜிக் இது குறித்து பேசுகையில், "நகோர்னா-காராபக் பகுதியில் இரு நாடுகளும் மேற்கொண்ட மோதல் காரணமாக சுமார் 1.30 லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளியேறியுள்ளனர். 76 பள்ளிகள் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான குழந்தைகள் வான்வழித் தாக்குதல் காரணமாக போர் பயத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.

மக்கள் வாழும் பகுதியில் இதுபோன்ற போர் நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாகக் கண்டிக்கிறது. உலக நாடுகள் ஒன்றிணைந்து இதற்குத் தீர்வுகாண வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ரஷ்யா, அமெரிக்கா சார்பில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இரு நாடுகளும் மீறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மீண்டும் அதிகரிக்கும் கரோனா... பிரான்ஸ் அதிபர் எடுத்த அதிரடி முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.