ஹைதராபாத்: ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிறு அன்று தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அந்நாட்டின் தலைநகர் காபூலுக்குள் தாலிபான்கள் நுழையும் முன்பு ஆப்கான் அதிபராக இருந்த அஷ்ராப் கானி நாட்டை விட்டு தப்பியோடினார்.
இந்நிலையில், தான்தான் ஆப்கானிஸ்தான் அதிபர் என்றும், தாலிபான்களுக்கு என்றுமே அடிபணியமாட்டேன் எனவும் அந்நாட்டின் துணை தலைவர் அம்ருல்லா சாலே தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தஜிகிஸ்தான் நாட்டில் உள்ள ஆப்கான் தூதரகத்தில் அஷ்ரப் கானியின் புகைப்படம் நீக்கப்பட்டு அம்ருல்லா சாலேவின் புகைப்படம் சேர்க்கப்பட்டது.
இச்சூழலில் அம்ருல்லாவின் கணக்கு, அவருடைய அலுவலகங்களின் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. அந்த கணக்குகள் அனைத்தும் ட்விட்டரின் விதிகளை மீறியதாக அந்நிறுவனம் முடக்கியதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: பண மூட்டைகளுடன் தப்பி சென்றேனா? அஷ்ரப் கானி ஆதங்கம்