வடமேற்கு ஆஸ்திரேலியா அருகே இந்தியப் பெருங்கடலில் பிளேக் என்ற புயல் உருவாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் நகரும் இந்தப் புயல், நாளைக்குள் தீவிரப்புயலாக உருவெடுத்து கடற்கரை நகரமான பூம்சில் கரையைக் கடக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முதல் உதவிப் பெட்டி, டார்ச், ரேடியோ, மின்கலன், உணவு, தண்ணீர் ஆகியவற்றைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ளமாறு அந்நகர மக்களுக்கு ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
புயலால் பலத்த மழை ஏற்படும் என்பதால் மேற்கு கிம்பெர்லி, கிழக்கு பிள்பாரா ஆகிய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இந்தப் புயலானது கடந்த சில வாரங்களாக ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளிலும் கொளுந்துவிட்டு எரியும் காட்டுத்தீக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இதையும் படிங்க : 3,500 அமெரிக்க படையினர் குவைத்திற்கு அனுப்பிவைப்பு!