தெற்கு எகிப்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்த நிலையில், 66 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
சோஹாக் மாகாணத்தில் தஹ்தா மாவட்டத்தில், கெய்ரோவிலிருந்து 460 கிமீ தொலைவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. தகவலறிந்ததும், அப்பகுதிக்கு 30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விரைந்தன. இவ்விபத்தானது எமர்ஜென்சி பிரேக்கை தவறுதலாக யாரோ இயக்கியதால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ்விபத்தில் முதல் ரயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து கவிழ்ந்துவிட்டன.
எகிப்தின் ரயில்வே நிர்வாகம் மோசமான வரலாற்றைக் கொண்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் மட்டுமே, நாடு முழுவதும் 1,793 ரயில் விபத்துகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக, கடந்தாண்டு அலெக்சாண்ட்ரியாவுக்கு வெளியே இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் 43 பேர் இறந்தனர்.
இதையும் படிங்க: நிகிதா தோமர் கொலை வழக்கு, குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் சிறை!