தென் கொரியாவில் கொவிட்-19 (கொரோனா) வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும், தென் கொரியாவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் 60 பேர் பாதிப்படைந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது. இதன் மூலம் கொரோனாவல் அங்கு பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 893 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக அதில் 49 பேர் டேகு, வடக்கு கியோங்சாங் (Gyeongsang) மாகாணத்தில் வசித்து வந்தவர்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில், தற்போது இரண்டாவது இடத்தை தென்கொரியா பிடித்துள்ளது.
இதனால், அப்பகுதி முழுவதும் சுகாதாரத்துறை அலுவலர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் தென் கொரியாவில் பள்ளிகள் திறப்பது தாமதமாகியுள்ளது. மேலும், அந்நாட்டின் ஜனாதிபதி மூன் ஜே இன்-னும் மிக உயர்ந்த எச்சரிக்கையையும் நாட்டு மக்களுக்கு அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் டேகு மற்றும் அருகே உள்ள பகுதிகளுக்குச் சென்ற பொதுமக்களை, இரண்டு வாரங்கள் வீட்டிலேயே இருக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், டேகு மாகாணத்தில் உள்ள தேவாலயத்திற்குச் சென்ற மக்களைக் கண்டுபிடித்து சோதனை செய்யும் முயற்சியில், 600 காவல் துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சியோலில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் வைரஸ் அழிக்கும் கிருமி நாசினிகளை அலுவலர்கள் தெளித்து வருகின்றனர்.
மேலும், கொரியாவில் உள்ள அமெரிக்கப் படையினர், டேகு மாகாணத்தில் அமெரித்த ராணுவத்தைச் சார்ந்திருக்கும் 61 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
இதனால், கொரோனாவின் தாக்கம், தென்கொரியாவில் ஒவ்வொரு பகுதியிலும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: ’ஹஜ் பயணத்திற்கு கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டும்’ - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்