கரோனா வைரஸ் பரவலை தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் பலரும் வீடுகளில் முடங்கியிருந்தனர். தற்போது, வைரசின் தாக்கம் குறைந்ததால் ஊரடங்கில் தளர்வுகள் அறவிக்கப்பட்டதையடுத்து பழைய நிலைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். பொது இடங்களும் மக்கள் பார்வைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திறக்கப்படுகிறது.
அந்த வகையில், ஜப்பானில் நான்கு மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட டோக்கியோ டிஸ்னிலேண்ட் பார்க் மீண்டும் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. டிஸ்னிலேண்ட் வரும் மக்களுக்கு பல்வேறு கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஸ்னிலேண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வாசலில் வெப்ப பரிசோதனை செய்யப்படும் , முகக்கவசம் அணிவது கட்டாயம், கிருமி நாசினி உபயோகித்து கைகளை சுத்தம் செய்ய வேண்டும், கரோனா அறிகுறிகள் இருந்தால் அனுமதி மறுப்பு, டிஸ்னிலேண்ட் பூங்காவின் டிக்கெட்களை ஆன்லைனில் மட்டும்தான் பதிவு செய்ய முடியும்" என குறிப்பிட்டுள்ளது.