பாகிஸ்தானின் பலோசிஸ்தானில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் மூன்று பேர் உயிரிழந்ததோடு, 7 பேர் காயமடைந்தனர். தென்மேற்கு பலோசிஸ்தானின் குவெட்டா பகுதியின் ஹசர்கஞ்சியில் உள்ள மார்க்கெட்டில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சிகளின் பெரும் கூட்டணியான பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பி.டி.எம்) சார்பாக குவெட்டாவின் அயூப் மைதானத்தில் பிரதமர் இம்ரான் கானை வெளியேற்ற அழுத்தம் கொடுப்பதற்காக நடத்தப்பட்ட பேரணியின்போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த குவெட்டா மார்க்கெட் பகுதியை பேரணி அடைவதற்கு 35 நிமிடங்கள் முன்பாக குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது..
பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு பொதுக் கூட்டத்தை ஒத்திவைக்குமாறு பலோசிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: பண்டிகை நேரத்தில் மக்கள் உள்ளூர் பொருள்களுக்கு முக்கியத்துவம் தாருங்கள்' - பிரதமர் வேண்டுகோள்