பாகிஸ்தான் மக்களால் நன்கு அறியப்பட்ட பெண் விடுதலைப் போராளி குலாலை இஸ்மாயில். 32 வயதான குலாலை இஸ்மாயில், பாகிஸ்தானில் நடக்கும் பல்வேறு சமூக அத்துமீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
வடமேற்கு பாகிஸ்தானில், அந்நாட்டு ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டது. அங்குள்ள பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன.
இதுகுறித்து பேச தொடங்கியதும், பாகிஸ்தான் அரசின் அக்கினிப் பார்வை குலாலை இஸ்மாயில் மீது விழ தொடங்கியது. இதையடுத்து அவர், அந்நாட்டு அரசால் கண்காணிக்கப்பட்டார்.
குலாலை இஸ்மாயில், பல்வேறு சமூக பணிகளை ஆற்றியுள்ளார். பெண் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவரின் சேவையை பாராட்டி பல்வேறு உலக நாடுகள் விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளன.
இந்த நிலையில், இவரை கைது செய்து விசாரிக்க பாகிஸ்தான் ஐ.எஸ்.எஸ். அமைப்பு திட்டம் தீட்டியது. இதையடுத்து அவர், பாகிஸ்தானில் இருந்து வெளியேறினார். அமெரிக்காவில் வசிக்கும் அவரது சகோதரி வீட்டில் தற்போது வசித்து வருகிறார்.
அப்போது அவருக்கு எதிராக குலாலை இஸ்மாயில் போராட்டத்தில் ஈடுபட்டார். அந்த போராட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக பேசிய குலாலை இஸ்மாயில், "பாகிஸ்தான் நாட்டில் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைத்ததில்லை.
பாகிஸ்தானில் ஜனநாயகம் வலுப்பெற வேண்டும். அங்கிருக்கும் அப்பாவி மக்கள் பலர், பயங்கரவாதத்துக்கு இரையாகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.
வடமேற்கு பாகிஸ்தானிய பெண்கள், ராணுவத்தினரால் சூறையாடப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை தேவை" என்றார். இந்த நிலையில் குலாலை இஸ்மாயில் பிணையில் வெளிவரமுடியாதபடி கைது வாரண்ட் வழங்கி பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சமூகவலைதளத்தில் குலாலை இஸ்மாயில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், "பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. ஏஜென்டை திருப்திப்படுத்தும் விதமாக, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது நீதிமன்றத்தின் நடைமுறையல்ல. பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஏற்ப, நீதிமன்றம் நீதியை சமாதானப்படுத்திக் கொள்கிறது" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க:
71 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கும் நிஜாம் சந்ததிக்கும் ஆதரவாகத் தீர்ப்பளித்த இங்கிலாந்து!