ETV Bharat / international

உண்மை என்றால், நிரூபித்துக் காட்டுங்கள்! இந்தியாவுக்கு பாக். வலியுறுத்தல் - must be proven.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இருந்த பயங்கரவாத முகாம்களை அழித்ததை, இந்தியா நிரூபிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு பாக். வலியுறுத்தல்
author img

By

Published : Oct 22, 2019, 7:17 AM IST

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், இந்திய ராணுவத்தினரைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினர் அக்டோபர் 10ஆம் தேதி மாலை தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் இந்திய வீரர்கள் இருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி அருகில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகளைக் குறிவைத்தும், தங்கதார் செக்டாருக்கு எதிர்ப்புறமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள நீலம் பள்ளத்தாக்கில் இருந்த நான்கு பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்தும் இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர்.

இந்த தாக்குதலில் மூன்று பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்ததாகக் கூறப்பட்டது. பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 10 பேரும், பயங்கரவாதிகள் 20 பேரும் உயிரிழந்ததாக, ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால், இதற்கு பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஆசிஃப் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “உயர் பொறுப்பினை வகிக்கும் விபின் ராவத், பாகிஸ்தான ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த மூன்று பயங்கரவாத முகாம்களை, இந்திய ராணுவம் அழித்து விட்டது என்று கூறுவது ஏமாற்றமளிக்கிறது. அவர்கள் எந்த முகாமையும் குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை.

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தினர், வெளிநாட்டு தூதரையோ அல்லது ஊடகத்தினரையோ சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் அழைத்துச் சென்று நிரூபித்தால் அதை வரவேற்போம். புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக தவறான குற்றச்சாட்டுகள் முன்வைப்பதை இந்திய ராணுவம் வழக்கமாகக் கொண்டுள்ளது” என்று பதிவிட்டிருந்தார்.

Intro:Body:

india pakistan issue

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.