ஆசியாவில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை உள்ளிட்டவற்றை மேம்படுத்த சி.ஐ.சி.ஏ எனும் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டமைப்பின் மாநாடு சீரான இடைவேளையில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இம்முறை தஜிகிஸ்தான் தலைநகர் டூஷான்பேவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அவரை தஜிகிஸ்தான் அதிபர் எமோமலலி ரஹ்மோன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "ஆசிய கண்டத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக பயங்கரவாதம் திகழ்கிறது. சி.ஐ.சி.ஏ கூட்டமைப்பு தொடர்ந்து பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்கொள்ள செயல் திட்டத்தை வகுத்து வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற இந்தியா - மத்திய ஆசிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில், பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை, கூட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது" என்றார்.