ETV Bharat / international

ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு பொதுமன்னிப்பு- தாலிபன்கள் - தாலிபன்கள் நம்பிக்கை

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதால் அரசு ஊழியர்கள் வழக்கம்போல் அலுவலகம் வரலாம் என்று தாலிபன்கள் அறிவித்துள்ளனர்.

Taliban
Taliban
author img

By

Published : Aug 17, 2021, 2:37 PM IST

காபூல்: ஆப்கன் நாட்டில் தாலிபன்கள் தாக்குதல் நடத்தி, ஆட்சியை பிடித்துவிட்டனர். அதிபர் மாளிகை இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதனிடையே, அதிபராக இருந்த அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவிவருகிறது. இதன்காரணமாக மக்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல் இருந்துவருகின்றனர்.

அரசு, தனியார் அலுவலகங்கள் செயல்படவில்லை. ஆப்கன் மட்டுமல்லாமல், பிற நாட்டு மக்களும் நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர். அதேபோல, ஆப்கனில் உள்ள தூதரகங்களையும் காலி செய்துவருகின்றனர்.

கடந்த இரண்டு நாள்களாக காபூல் விமானநிலையம் முடக்கப்பட்டிருந்த நிலையில், அமெரிக்க ராணுவ உதவியுடன் இன்று மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதனால், அந்தந்த நாடுகள் ராணுவ விமானங்கள் மூலம் தங்களது நாட்டின் மக்களை மீட்டு வருகின்றனர். இந்தியாவும் ராணுவ விமானம் மூலம், ஆப்கனில் உள்ள தூதர்கள், இந்தியர்களை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், “ஆப்கனில் தூதரகங்கள், அயல்நாட்டு தொண்டு நிறுவனங்கள் வழக்கமாக செயல்படலாம்.

தூதர்கள், அலுவலர்கள் அச்சமின்றி தங்களது பணிகளை செய்யலாம். அனைவருக்கும் பாதுகாப்பான சூழல் வழங்கப்படும். அதேபோல, அரசு ஊழியர்களும் எவ்வித அச்சமும் இன்றி வழக்கம்போல் அலுவலகம் வரலாம். முழு நம்பிக்கையுடன் பணிகளை தொடரலாம்" என தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இ-எமர்ஜென்சி விசா: இந்தியர்களை மீட்க விரைவு நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.