அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றபின், ஆப்கானில் இருக்கும் அமெரிக்கப் படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டார். அதன்விளைவாக அமெரிக்காவுக்கும், பயங்கரவாத அமைப்பான தலிபானுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் அன்மையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அம்சமாக ஆப்கான் சிறையில் உள்ள 5 ஆயிரம் ஆப்கான் பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்ட நிலையில், தலிபான்கள் இதுபோன்ற கோரிக்கைகளை ஆரம்பத்திலேயே திணிப்பது முறையல்ல, ஜனநாயக அரசின் ஆலோசனைக்குப் பின்னரே முடிவு மேற்கொள்ளப்படும் என ஆப்கான் அதிபர் அஸ்ரஃப் கானி தெரிவித்தார்.
ஆனால் தனது கோரிக்கையில் விடாப்பிடியாக உள்ள தலிபான்கள், தங்கள் அமைப்பைச் சேர்ந்த கைதிகளை அங்குள்ள பக்ராம் மாகாண சிறையில் சென்று சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். அரசு பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய சுமூகமான முடிவை தலிபான்கள் எட்டியுள்ளதாகவும். சிறையில் உள்ள கைதிகளை நேரில் அடையாளம் கண்டு அவர்களை விடுவிக்கும் நடவடிக்கையை விரைந்து மேற்கொள்வோம் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மனித இனமே ஆபத்தில் உள்ளது - ஐநா சபை