காபுல்: கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் தாலிபன் அமைப்பினால் கைப்பற்றப்பட்டது. ஆப்கன் கைப்பற்றப்பட்டபோதே அங்கு கலை, கல்வி, விளையாட்டு ஆகிய துறைகளில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கேற்றார் போல், பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது அவசியமில்லை என தாலிபன் கலாசார அமைப்பின் துணைத் தலைவர் அகமதுல்லா வாசிக் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும், பெண்கள் கல்வி நிலையங்களுக்குச் செல்வதிலும் தொடர்ந்து சிக்கல் நீடித்துவந்தது. இந்நிலையில், மேல்நிலைப்பள்ளிகளில் மாணவிகள் பயில்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என ஆப்கன் உள் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சயீத் கோஸ்தி தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானில் ஷியா மசூதிக்குள் குண்டுவெடிப்பு.. 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!