ETV Bharat / international

எங்கள் துணை பிரதமர் உயிரோடுதான் இருக்கிறார் - தாலிபான் அறிவிப்பு - ஆப்கானிஸ்தான் செய்திகள்

ஆப்கன் துணை பிரதமராகப் பொறுப்பேற்ற அப்துல் கனி பரதார் உடல்நிலை குறித்து தாலிபான் அரசு விளக்கமளித்துள்ளது.

Mullah Baradar
Mullah Baradar
author img

By

Published : Sep 13, 2021, 10:51 PM IST

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப்பின் தாலிபான் அரசு ஆட்சியமைத்துள்ளது. புதிதாக அமைந்துள்ள இஸ்லாமிக் அமீரக அரசின் அமைச்சரவையில் பிரதமராக முல்லா முகமது ஹசன் பதவிவகிக்கிறார்.

முல்லா அப்துல் கனி பரதார், மொலாவி அப்துல் சலாம் ஹனாபி ஆகியோர் துணைப் பிரதமராகப் பதவியில் உள்ளனர்.

துணை பிரதமரான அப்துல் கனி பரதார் சண்டையின்போது படுகாயம் அடைந்ததாகவும், அதன் காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் காட்டுத் தீயாய் பரவின.

இந்நிலையில், இந்த தகவலுக்கு தாலிபான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. அவர் முழு உடல்நலத்துடன் உயிருடன்தான் உள்ளார் என தாலிபான் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்துள்ளார். மேலும், பரதார் உயிருடன் இருப்பதற்கு ஆதாரமாக அவரின் ஆடியோ பதிவையும் தாலிபான் வெளியிட்டுள்ளது.

  • Mullah Bradar Akhund, Deputy PM, Islamic Emirate of Afghanistan in a voice message rejected all those claims that he was injured or killed in a clash. He says it is lies and totally baseless.

    — Suhail Shaheen. محمد سهیل شاهین (@suhailshaheen1) September 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தாலிபான் அரசின் முக்கிய முகமாகக் கருதப்படுபவர் பரதார். அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்தின் காரியகர்தாவாக திகழ்ந்தவர் அப்துல் கனி பரதார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆப்கனை விட்டு வெளியேறிய குத்துச்சண்டை வீராங்கனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.