அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றபின் அவரின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக அமெரிக்கா - தலிபான் பயங்கரவாத அமைப்புக்கு இடையே அமைதி ஒப்பந்தம் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அம்சமாக ஆப்கான் சிறையில் உள்ள 5 ஆயிரம் ஆப்கான் பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்ட நிலையில், தலிபான்களை விடுவிக்க அந்நாட்டு அதிபர் அஸ்ரப் கானி தொடர்ச்சியாக தயக்கம் காட்டிவருகிறார்.
இதன் காரணமாக அமைதி ஒப்பந்தத்தை மீறி தலிபான்கள் தொடர் தாக்குதலை ஆப்கானில் மேற்கொண்டுவருகின்றனர். ஆப்கான் அரசும் தனது பங்கிற்கு பதில் தாக்குதலை நடத்திவரும் சூழலில், இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது.
இதையடுத்து, இரு தரப்பும் இன்று தொடங்கி மூன்று நாட்கள் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக முடிவெடுத்துள்ளன. இரு தரப்பின் இந்த முடிவை அமெரிக்க ராணுவம் மனதார வரவேற்பதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அணு ஆயுத திறனை அதிகரிக்க வடகொரியா திட்டம்: ராணுவ அலுவலர்களுடன் கிம் ஆலோசனை