தைவான் தீவு நாட்டில் ஞாயிற்றுக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் அந்நாட்டு அதிபர் சாய் இங் வென் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கட்சி (Democratic Progressive Party) 57.2 சதவிகித வாக்குகளுடன் வெற்றிவாகை சூடியது.
இவருக்கு எதிராக களமிறங்கிய ஹான் கியோ யூ தலைமையிலான தேசியவாத கட்சி (Nationalist Party) 39.6 சதவிகித வாக்குகளைப் பெற்றது.
தேர்தல் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் சாய், சீனாவின் அச்சுறுத்தலுக்கு ஜனநாயக சித்தாந்தத்தில் செயல்பட்டுவரும் தைவான் நாடோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோ அடிபணியாது. சீனா இதனைப் புரிந்துக்கொள்ளும் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.
சீனாவின் ஒரு பகுதியாக இருந்த தைவானில் கடந்த 1949ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் வெடித்தது. இதன் விளைவாக, தைவான் தனிநாடாக பிரிந்து செயல்பட்டுவருகின்றது.
ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட தைவானில் 2.3 கோடி மக்கள் வாழ்கின்றனர். ஆனால், தைவானை தங்களுடையது என உரிமை கொண்டும் சீனாவோ, அந்நாடை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
அதிபர் சாய் இங் வென்-ன் முந்தையை ஆட்சியில் தைவானை தனிமைப்படுத்த சீனா பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக சாய் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். அவர் இந்த தேர்லில் வெற்றிபெற்றதற்கு இதுவும் ஓர் காரணமாக அமைந்துள்ளது.
தைவான் அதிபராக சாய் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது அரசுக்கு சீனா கூடுதலாக அழுத்தம் தரும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க : இந்தியா வருகிறார் இலங்கை பிரதமர் ராஜபக்ச!