நியூஸிலாந்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஆக்லாந்து நகரில் 1.4 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் இன்று(ஜூன் 19) காலையில் காவல் துறையினர் வழக்கம்போல், போக்குவரத்து சோதனைப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவ்விடத்திற்கு வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திடீரென்று காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல் துறையினருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தாக்குதலை நடத்திய அந்த நபர் சம்பவ இடத்தைவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நியூஸிலாந்தில் 2019ஆம் ஆண்டு கிறிஸ்தவ தேவாலயத்திலும் மசூதியிலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து மக்களால் கையாளப்படும் பயங்கரமான, தானியங்கி ரக ஆயுதங்களைப் பயன்படுத்த, அந்நாட்டு அரசு தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்திய எல்லைகளை சேர்த்து புதிய வரைபடம்: சீண்டும் நேபாளம்