ETV Bharat / international

ராக்கெட்களை வானிலேயே அழிக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு அரண்... அயன் டோம் சிஸ்டம் முழுத் தகவல்! - Israel’s Iron Dome

ஆயிரக்கணக்கான ராக்கெட் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்திய இஸ்ரேலின் வான்வழி பாதுகாப்பு அரண், பலரின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளது.

Stunning
ராக்கெட்
author img

By

Published : May 15, 2021, 1:02 PM IST

புனித ரமலான் மாதத்தை ஒட்டி இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள புனிதத் தலத்தில் வழிபட பாலஸ்தீனியர்கள் குழுமியிருந்தபோது, இஸ்ரேல் காவல் துறைக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. அதைத் தொடர்ந்து இரு நாட்டு எல்லையான காஸாவில் இரண்டு நாள்களாக கடும் மோதல் நிலவி வருகிறது.

இரண்டு தரப்பும் மாறிமாறி வான்வெளித் தாக்குதல் நடத்தி வருவதால் இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. ஆனால், இஸ்ரேலின் ராக்கெட் எதிர்ப்பு அமைப்பு வானத்திலேயே ராக்கெட்களை இடைமறித்து அழித்துவிடுகிறது. இவ்வாறு கிட்டத்தட்ட 90 விழுக்காடு தாக்குதல்கள் தடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் பின்னணியில் இஸ்ரேலின் கண்ணுக்குத் தெரியாத பாதுகாப்பு அரணான அயன் டோம் சிஸ்டம் (Iron Dome system) முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் மூலம் ராக்கெட்கள் வானிலே தடுத்து நிறுத்தப்படும் காணொலிகள் சமூக வலைதளத்தில் அதிக அளவில் பரவ தொடங்கியது. இத்தகைய பாதுகாப்பு வசதிகள் நமது நாட்டில் உள்ளதா எனப் பலரும் ட்விட்டரில் கேள்வி ஏழுப்பி வருகின்றனர்.

அயன் டோம் சிஸ்டம்

அயன் டோம் சிஸ்டம் (Iron Dome system) அமைப்பிலிருக்கும் சக்திவாய்ந்த ரேடார்கள், ஏவுகணைகளை ட்ராக் செய்கிறது. பின்னர் தமிர் (Tamir) என்ற அழைக்கப்படும் இடைமறிப்பு கருவி மூலம் வானிலேயே ஏவுகணைகள் அழிக்கப்படுகின்றன.

sraelPalestin
ராக்கெட் தாக்குதல்களை தடுத்து நிறுத்திய இஸ்ரேல்

ராக்கெட்டுகள், ஏவுகணைகள், பீரங்கிகள் மற்றும் மோர்ட்டார் ஆகியவற்றில் இருந்து வரும் தாக்குதல்களைத் தடுக்கவும், அனுமதியின்றி இஸ்ரேலுக்குள் நுழைய முயலும் ஹெலிகாப்டர், விமானங்களைத் தடுக்கவும் இது பெரும் உதவியாக அமைகிறது.

மூன்று தளங்களுக்கும் பாதுகாப்பு

ரஃபேல் நிறுவனத்துடன் இணைந்து 2011ஆம் ஆண்டில் Iron Dome சிஸ்டத்தை இஸ்ரேல் உருவாக்கியது. இந்த சிஸ்டம் மூன்று வகையில் பாதுகாப்பு வழங்குகிறது. வான்வழித் தாக்குதலை தடுத்து நிறுத்துவது மட்டுமின்றி, ராணுவ வீரர்கள் / தளவாடங்களுக்கு முன் சென்று பாதுகாப்பை வழங்குகிறது. அதேபோல, கடற்படைக்கும் பாதுகாப்பு வழங்குகிறது.

இதுதொடர்பாக ரஃபேல் கூறுகையில், "2000க்கும் மேற்பட்ட தாக்குதல்களில் 90% பாதுகாப்பை Iron Dome system வழங்கியுள்ளது. இது அனைத்து காலநிலைகளிலும், இரவு - பகல் என எந்நேரமும் பாதுகாப்பை வழங்கும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அயன் டோம் சிஸ்டம்

அயன் டோம் சிஸ்டம் அமைக்கும் செலவு

ஒவ்வொரு பேட்டரி அல்லது முழு அலகுக்கும் சுமார் 50 மில்லியன் டாலர்கள் செலவாகுகின்றன. மேலும், ஒரு இடைமறிப்பு தமீர் ஏவுகணைக்கு 80 ஆயிரம் டாலர்கள் செலவாகிறது. ஆனால், இதற்கு மாறாக, ஒரு ராக்கெட்டுக்கு வெறும் ஆயிரம் டாலர் மட்டுமே குறைந்தபட்சம் செலவாகும். ராக்கெட்டை வானிலை அழிப்பதற்கு, குறைந்தது இரண்டு தமீர் ஏவுகணைகள் அனுப்பப்படுகின்றன. அதிக அளவில் பணம் செலவழிக்கப்பட்டாலும், ஒரு உயிர் காப்பாற்றப்படுவதே பெரியது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.