இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று மூன்று தேவாலயங்கள், மூன்று நட்சத்திர விடுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த தாக்குதலில் சிக்கி 257 பேர் உயரிழந்தனர். இது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குண்டு வெடிப்பு குறித்து முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் வேண்டுமென்றே இலங்கை அரசால் அது தவிர்க்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறியதாக குற்றம்சாட்டப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் பூஜித் ஜெயசுந்தரா, பாதுகாப்பு செயலர் ஹேமாசிரி பர்னாண்டோ ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.