இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கின்றனர். மேலும், பொது இடங்களில் ஆங்காங்கே வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதால் பீதியில் உறைந்திருந்த இலங்கை தற்போது மெள்ள மெள்ள இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறது.
இதற்கிடையே, வதந்தி பரப்புவதை தடுக்கும் நடவடிக்கையாக அந்நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எட்டு நாட்களுக்கு பிறகு சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.