இலங்கையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தல் கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்றார். பின்னர், தனது மூத்த சகோதரரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார்.
இதையடுத்து, நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த இலங்கை அரசு திட்டமிட்டது. சட்டவிதிகளின் படி நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டுமெனில், மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்களின் ஆதரவோ அல்லது நான்கரை ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும்.
இந்நிலையில், தற்போதைய நாடாளுமன்றத்தின் காலம் கடந்த மார்ச் 1ஆம் தேதியுடன் நான்கரை ஆண்டுகள் நிறைவடைந்ததால், அதனைக் கலைக்கப்பதற்கான அரசாணையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச நேற்று கையெழுத்திட்டார்.
இதையும் படிங்க : ஒரே வருடத்தில் 3ஆவது தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்; பிழைப்பாரா நெதன்யாகு