ETV Bharat / international

தி நியூ டைமண்ட் கப்பல் தீ விபத்து - காணொலி வெளியீடு - தி நியூ டைமண்ட் கப்பல் தீ விபத்து

இலங்கை கிழக்கு கடற்பகுதியில் 2.60 லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிவந்த கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ அண்மையில் அணைக்கப்பட்ட நிலையில், அதன் வான்வழி காணொலி தற்போது வெளியாகியுள்ளது.

sri-lankan-oil-tanker-mt-new-diamond aerial view

author img

By

Published : Sep 6, 2020, 4:58 PM IST

'தி நியூ டைமண்ட்' என்ற கப்பல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்காக 2.60 லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு குவைத்தின் மினா அல் அஹ்மதி துறைமுகத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் புறப்பட்டது.

இலங்கை கிழக்கு கடற்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த கப்பலில் கடந்த 3ஆம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயை கட்டுக்குள் கொண்டுவர, இலங்கைக் கடற்படையினரால் ஏற்பாடுகள் முன்னெடுக்கபட்டன. இந்திய அரசு சார்பிலும் தீயை அணைக்க இரண்டு கப்பல்கள் அனுப்பப்பட்டன.

தி நியூ டைமண்ட் கப்பல் - தீ விபத்து காணொலி

கப்பலில் இருந்த கேப்டன் உள்பட 22 பேர் மீட்கப்பட்டனர். தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று நீண்டப் போராட்டத்திற்குப் பிறகு, இந்தத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது தீ அணைக்கப்பட்ட கப்பலின் காணொலி வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க...இந்தியாவுக்கு 2.60 லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிவந்த கப்பலில் தீவிபத்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.