ETV Bharat / international

'கொழும்பு துறைமுக நகர திட்டத்தை அரசு ஊக்குவிக்கும்' : இலங்கை அதிபர் உறுதி! - Gothabaya says Sri Lanka will support Colombo port City projec

கொழும்பு : சீனாவின் உதவியுடன் கட்டப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகர திட்டத்தை இலங்கை அரசு உறுதியுடன் ஊக்குவிக்கும் என அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

Colombo port City project,  கொழமை துறைமுக நகர திட்டம்
Colombo port City project
author img

By

Published : Dec 8, 2019, 6:12 PM IST

சீனாவின் நிதியுதவியோடு இலங்கை தலைநகர் கொழும்புவில், சுமார் 269 ஏக்கர் பரப்பளவில் துறைமுக நகரம் ஒன்று உருவாக்கும் பணியில் அந்நாடு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் இந்தத் திட்டம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, "சீனாவின் உதவியோடு செயல்பட்டுவரும் கொழும்பு துறைமுக நகர திட்டத்தை, இலங்கை அரசு உறுதியுடன் ஊக்கவிக்கும். இதன்மூலம் அங்குப் புதிய வர்த்தக மையம் உருவாகும்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் இலங்கைக்கான சீன தூதர் செங் ஸுயுவான் (Cheng Xueyuan) பங்கேற்றார். இலங்கையின் மிகப் பெரிய அந்நிய நேரடி முதலீட்டில் உருவாகும் இந்தத் திட்டம், வருங்காலத்தில் கோடிக்கணக்கில் முதலீட்டை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, இந்தத் திட்டத்தின் மூலம் 80 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : அடுத்த மைல்கல்லை நோக்கி விராட் கோலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.