இலங்கையில் கடந்த சனிக்கிழமை நடந்த 8ஆவது அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் பொது ஜன பெரமுனா கட்சி சார்பாக போட்டியிட்ட அந்நாட்டு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்ச 50 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளைக் குவித்து வெற்றி கண்டுள்ளார்.
இவரது வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள கோத்தபய ராஜபக்ச, "உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி. பௌத்த தத்துவத்தின் அடிப்படையில் இரு நாட்டு உறவையும் பலப்படுத்த, அமைதியை நிலை நாட்ட உங்களுடன் சேர்ந்து செயல்பட காத்திருக்கிறேன்" என்று நன்றி தெரிவித்திருந்தார்.
இதையும் வசிங்க : கச்சா எண்ணெய் உயர்வால் ஈரானில் கிளர்ச்சி - இணைய சேவைக்குத் தடை